விவேகானந்தரின் 160 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டும் இந்திய நாட்டின் 74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டும் ஆனைமலையில் 6-வது ஆண்டாக ஜனவரி 29ஆம் தேதி இன்று காலையில் முக்கோணத்தில் மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது இப்போட்டியில் ஆண்களுக்கான பொதுப் பிரிவு,
பெண்களுக்கான பொது பிரிவு, மற்றும் பள்ளி அளவில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு குழுவும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு குழுவும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரு குழு போன்ற தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளை விவேகானந்தர் சேவா மையம், ஆனைமலை ஆலம் விழுது குழுவினர் மற்றும் ரோட்டரி கேப்ஸ் ஆப் பொள்ளாச்சி போன்ற குழுவினர் மாவட்ட அளவிலான மினி மாரத்தான் போட்டி ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன் ஆனைமலை.