கோவை மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று ஆனைமலை மாசாணியம்மன் கோவிலாகும் இக் கோவிலில் அம்மன் சயன நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
மேலும் மாசாணியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தை அமாவாசையையொட்டி நடைபெறும் குண்டம் திருவிழா புகழ் பெற்றதாகும். இந்த விழா 18 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழாவை கொண்டாடும் விதமாக ஜனவரி 21 ஆம் தேதி சனிக்கிழமை தை அமாவாசை இன்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனை அடுத்து கொடி மரத்திற்கு மாவிலை, மலர் மாலை, பூக்கள் தூவி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க 70 அடி நீள மூங்கில் மரத்தில் கொடி கட்டப்பட்டது.
கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் வளாகத்தின் முன்புறம் கொடிமரம் ஏற்றப்பட்டு விழா துவங்கியது அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘மாசாணி தாயே, மாசாணி தாயே’ என்று பக்தி கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் மாசாணியம்மன் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கொடி கம்பத்திற்கு பால் அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜை நடைபெற்றது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன் ஆனைமலை.