இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி!!
இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது.
துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 162 ரன்கள் சேர்த்தது. தீபக் ஹூடா 41 ரன்களும், அக்சர் பட்டேல் 31 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.
163 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை 20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதன் காரணமாக இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் டி20 தொடரில் இந்திய அணி 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு.