கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் 1994 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 100 பேர் கடந்த 2019 ஆம் ஆண்டு “ஒரு கூட்டு பறவைகள்” என்ற அமைப்பை ஏற்படுத்தி மாணவர்கள் சந்திப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.
இந்த ஆண்டு நான்காம் ஆண்டு விழாவை முன்னிட்டு மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் உள்ள விஸ்வநாத செட்டியார் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு நல திட்டஉதவிகள் வழங்கினார்கள். உடல் நலம் குன்றிய முதியோர்களுக்கு உதவும் வகையில் மருத்துவ கட்டில் மெத்தை பெட்ஷீட் மற்றும் கிரைண்டர்கள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் மற்றும் டாஸ்மார்க் விற்பனையாளர் சங்க கோவை மாவட்ட தலைவர் பத்மநாபன் ஆகியோர் முன்னிலையில் ஒரு கூட்டு பறவைகள் முன்னாள் மாணவர் அமைப்பினர் முதியோர் இல்லத்துக்கு வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆனந்த் குமார் கலந்து கொண்டு சேவை திட்டங்களை வாழ்த்தி பேசினார். தொடர்ந்து இன்று மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி காரமடை அருகே உள்ள ஸ்டார் ரிசார்ட்டில் நடைபெற்றது.
விழாவிற்கு முன்னர் மாணவர் அமைப்பின் நிர்வாகி வக்கீல் அஷ்ரப் அலி தலைமை தாங்கினார். அப்துல் வஹாப் , ரபிதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேக் ஷாநவாஸ் வரவேற்று பேசினார்.
ஒரு கூட்டு பறவை அமைப்பின் செயல்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் விளக்கி கூறினார். விழாவில் மகாஜன மேல்நிலைப்பள்ளி முன்னாள் தமிழ் ஆசிரியர் வை. பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி நாட்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளை மாணவர்களுடைய சிறப்புகளை பாராட்டி வாழ்த்தி பேசினார்.
விழாவில் குழந்தைகள் நல டாக்டர் மகேஸ்வரன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதன் சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் , ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரி பேராசிரியர் ஜெயக்குமார் மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆனந்த் குமார் அரசு வழக்கறிஞர் சிவ சுரேஷ் திமுக தெற்கு நகர செயலாளர் முனுசாமி சமூக ஆர்வலர்கள் ராஜேஸ்வரன், சுரேஷ், ஸ்டார் ரிசார்ட் உரிமையாளர் ஜி வெங்கடேஷ், ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
முதியோர் இல்லத்துக்கு நலத்திட்டங்கள் வழங்கியதற்கு விஸ்வநாதன் செட்டியார் முதியோர் இல்ல மேலாளர் குமரன் போஜன் நன்றி தெரிவித்து பேசினார். மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கம்ப்யூட்டரை பள்ளி ஆசிரியர்களிடம் முன்னாள் மாணவர்கள் வழங்கினார்கள்.
விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து மாணவர்கள் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ மாணவிகளின் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது அவர்களுக்கு ரபிதீன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியா, லண்டன் , ஜெர்மன் , ஆகிய நாடுகளில் பணிபுரியும் ஒரு கூட்டு பறவைகள் அமைப்பின் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தது மிகவும் சிறப்பாக அமைந்தது.
கடந்த ஆண்டு மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் நகர மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நெல்லித்துறை ஊராட்சி விளாமரத்தூர் பகுதியில் இருந்து குடிநீர் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தோம் அதை நிறைவேற்றிய தமிழக முதல்வர் ,
மு. க. ஸ்டாலின்அதற்கு உறுதுணையாக இருந்த ஆ. ராசா எம்பி, ஏ. கே. செல்வராஜ் எம். எல். ஏ. மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அஸ்ரப் அலி, துணைத் தலைவர் அருள் வடிவு முனுசாமி, நகராட்சி ஆணையர் வினோத் மற்றும் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் முன்னாள் மாணவர்கள் அமைப்பின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. சக மாணவர் அப்துல் வஹாப் தனது மகன் திருமண பத்திரிகையை முதன் முதலில் பள்ளி தோழர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தார். முடிவில் புரொபஷனல் கொரியர் நாகராஜ் நன்றி கூறினார்.
நாளை வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.