நாட்டின் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு கிணத்துக்கடவு சொக்கனூர் மற்றும் சங்கராயபுரம் கிராமங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மூத்த தலைவர் திரு அருணாசலம் அவர்கள் தலைமை தாங்கினார்.
கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் திரு R. கோபாலகிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி வைத்தார், அல்லா பக்க்ஷி அவர்கள் இனிப்பு வழங்கினார். உடன் குப்புலிங்கம்.முருகன்.சதீஷ்.ராஜன். பாலசுப்பிரமணி மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-அருண்குமார் கிணத்துக்கடவு.