குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானையால் பரபரப்பு! பொதுமக்கள் பீதி!!

கோயம்புத்தூர் மாவட்டம் பெரியதடாகம் வனப்பகுதியில் காட்டு யானைகள், காட்டு எருமைகள், மான்கள், காட்டு பன்றிகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவை வனப்பகுதியை விட்டு வெளியேறி தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வழக்கம். தற்போது பெரிய நாடாக வனப்பகுதியில் 15 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் சார்பில் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு மருதமலை வனப்பகுதியில் இருந்து ஒற்றை ஆண் யானை வெளியேறி கணுவாய் சாலையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அது அங்கு உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீரை குடித்துவிட்டு அருகில் உள்ள வாழைத் தோட்டத்திற்குள் சென்றது.

இந்த ஒற்றை காட்டு யானை குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அடுத்து விரைந்து வந்த வனத்துறையினர் யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இது ஒரு புறம் இருக்க குடியிருப்பு பகுதிக்குள் வந்து தண்ணீர் குடிக்கும் யானையை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளனர். தொடர்ந்து இன்று காலை கணுவாய் பிரதான சாலையில் ஒற்றை காட்டு யானை சாலையில் வந்ததால் அதனை கண்ட பொதுமக்கள் அச்சமடைந்து சிதறி ஓடினர்.

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அந்த ஒற்றை காட்டு யானை சாலையில் சுற்றி திரியும் காட்சிகள் பரவி வருகிறது. இது அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மத்தியில் பெரும் அச்சத்தை நிலவச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், இந்த காட்டு விலங்குகள் வணத்தை விட்டு வெளியே வந்து தங்களை அச்சுறுத்தி வருவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும், காட்டு யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp