கேரளா மாநிலத்திலிருந்து தமிழக பகுதியில் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்த 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்!!
கேரளா மாநிலத்திலிருந்து தமிழக பகுதியில் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்த இரண்டு டிப்பர் லாரிகள் பறிமுதல் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!
கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகளை டிப்பர் லாரிகள், மற்றும் வாகனங்கள் மூலம் கொண்டு வந்து தமிழகப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களில் கொட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் சுகாதார சீர்கேடு மற்றும் நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது இந்த சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் பகுதியில் இருந்து மீனாட்சிபுரம் சோதனை சாவடி வழியாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதில் மருத்துவக் கழிவுகள் மற்றும் கேரளாவில் சேகரிக்கப்படும் குப்பைகள் இருப்பது தெரியவந்தது இதனையடுத்து அந்த இரண்டு லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனர்கள் சந்தீப் (36)சுரேஷ்(32) மற்றும் ரினீஸ் (42) உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்துதீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொடர்ந்து கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் இறைச்சிக் கழிவுகளை தமிழக பகுதியில் கொட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது தமிழகத்திலிருந்து கற்களை ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் அங்கிருந்து திரும்பி வரும்போது அதில் கழிவுகளை நிரப்பி தமிழகத்திற்குள் கொண்டு வருகின்றனர்.
இதை யாரும் சரியாக கவனிப்பதில்லை பலமுறை இது போன்ற கழிவு பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தாலும் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது
எனவே தமிழகத்தின் சுகாதாரத்தை கேள்விக்குறியாக்கும்கேரளாவின் போக்கை தமிழக முதல்வர் கண்டிக்க வேண்டும் அதேபோல் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கழிவுகளை கொண்டு வரும் வாகனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.