கொசினா மற்றும் காவேரி குரூப் ஆப் கம்பெனி இணைந்து முப்பெரும் விழா!!
கொசினா மற்றும் காவேரி குரூப் ஆப் கம்பெனி இணைந்து முப்பெரும் விழா காவேரி தோட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது
கோவை தடாகம் சாலை சோமயனூர் பகுதியில் உள்ள காவேரி தோட்டத்தில் காவேரி குரூப் ஆப் கம்பெனி மற்றும் கோயம்புத்தூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் கொசினா சார்பில் புத்தாண்டு விழா, பொங்கல் விழா மற்றும் குடும்ப விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
முதலாம் ஆண்டாக நடைபெறும் இந்த முப்பெரும் விழாவில் கோயம்புத்தூர் கட்டிட பொறியாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்கள் இணைந்து காவேரி நிறுவனத்துடன் காவேரி தோட்டத்தில் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வி கே வி குழுமத்தின் தலைவர் சுந்தரராஜ் கலந்துகொண்டு பொங்கல் விழா மற்றும் விளையாட்டு விழா ஆகியவை தொடங்கி வைத்தார்.
பாரம்பரியமாக நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவில், பொங்கல் வைத்தல், ஜமாப், கயிறு இழுத்தல், உரியடித்தல், மற்றும் குழந்தைகளுக்கான ராட்டினம், சிறுவர்களுக்கான குதிரை பயணம், சாக்கு போட்டி என பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் என கிராம திருவிழாவை போல் இந்த முப்பெரும் விழா நடைபெற்றது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது குறித்து காவேரி குரூப் ஆப் கம்பெனியின் இணை நிர்வாக இயக்குனர் வினோத்சிங் ரத்தோர் செய்தியாளர்களிடம் பேசுவையில், கொசினா அமைப்பானது பல்வேறு பொறியாளர்களை தமிழகம் முழுவதும் கொண்டுள்ளது. இவர்களுடன் காவேரி நிறுவனம் தொடர்ந்து பணியாற்றி வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. காவேரி தோட்டத்தில் புத்தாண்டு விழா, பொங்கல் விழா மற்றும் குடும்ப விழா என முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வி கே வி குழுமத் தலைவர் சுந்தரராஜ் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. ஒருவர் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு அவருடைய பணிவே முக்கிய காரணமாக உள்ளது. நாம் வளர்ச்சிப் பாதைக்கு செல்லும் போது நாம் மற்றவர்களையும் ஊக்கம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்த விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர் வி கே வி குழுமத்தின் தலைவர் சுந்தரராஜ் பேசுகையில், காவேரி தோட்டத்தில் முதல்முறையாக முப்பெரும் விழாவாக குடும்ப விழா புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா மகிழ்ச்சியுடன் நடைபெற்று வருகிறது. இங்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெற வேண்டும் காவேரி நிறுவனம் எங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர்களுடன் நட்புறவு கொள்வோம் என தெரிவித்தார்.
-சீனி போத்தனூர்.