கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு- பக்தர்கள் பக்தியுடன் முழக்கமிட்டு வழிபாடு..!!!
கோவை தெற்கு மாவட்டம் ஆனைமலை நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில், திரௌபதி அம்மன் கோவில், மலை மீது அமைந்துள்ள சேனை கல்ராயன் கோவில் மற்றும் வேட்டராய பெருமாள் கோவில் போன்ற பல்வேறு கோவில்களில்
வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த சில நாட்கள் முன்பு விழா தொடங்கியது.
மேலும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் விழாவின் முக்கிய நாளான ஜனவரி இரண்டாம் தேதி அதிகாலையில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா.. ரங்கா..ரங்கா.. என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் விழாவை முன்னிட்டு ஸ்ரீ ராமானுஜர் அறக்கட்டளை சார்பாக காமாட்சி அம்மன் கோவில் திருமண மண்டபத்தில் இருந்து திருப்பல்லாக்கில் முக்கிய வீதிகளில் எடுத்துச் செல்லப்பட்டு பஜனை பாடல்களை பாடி வழிபட்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.