கோவையில் மஜக சார்பாக74வது குடியரசு தின விழா!!
நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு நிகழ்வாக கோவை மாநகர் மாவட்ட தலைமையகத்தில் மாநில செயலாளர் M.H.ஜாபர் அலி
கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.
வள்ளியம்மை பேக்கரி அருகில் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். ஆகிய இரு இடங்களில் தேசிய கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக வினர் எழுப்பினார்கள்.
இந்நிகழ்வில் , மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் H செய்யது இப்ராஹீம், மாவட்ட துணை செயலாளர்கள் H M முஹம்மது ஹனீப், சிங்கை சுலைமான், SA ஜாபர் சாதிக், மாவட்ட விவசாய அணி செயலாளர் அன்வர் பாஷா, மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் TMK காஜா, தொழிற் சங்க மாவட்ட துணை செயலாளர் பாரூக், தொழிற்சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் ரியாஸ் ஷாஜகான், மத்திய பகுதியின் துணைச் செயலாளர் செல்வபுரம் மொய்தீன், செல்வபுரம் வடக்கு கிளையின் துணைச் செயலாளர் ஹாரூன் ரஷீத் ஆகியோர் கலந்து கொண்டனர்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.