கோவை ஆர்.எஸ்.புரம் நேரு வித்யாலாயா பள்ளியில் 58 வது ஆண்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது!!
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள நேரு வித்யாலாயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் 58 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கோவை நல சங்கத் தலைவர் மகாவீர் போத்ரா தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினர்களாக கே எம் சி எச் மருத்துவமனை மருத்துவர் ரூபா ரங்கநாதன் மற்றும் சங்கர் அசோசியேட் பங்குதாரர் சித்தார்த் கோபால சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
முன்னதாக விழாவில் பள்ளி முதல்வர் பங்கஜ் ஆண்டு அறிக்கை வாசித்தார் நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளர் நிஷாந்த் ஜெயின் துணை செயலாளர் ரதன் சந்த் போத்ரா மற்றும் துணைத் தலைவர் கமலேஷ் பாப்னா பொருளாளர் அசோக் லூனியா கல்லூரி செயலாளர் சுனில் நகாடா துணைப் பொருளாளர் குலாப்சந்த் மேத்தா ஆகியோர் பங்கேற்றனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விழாவில் பொது தேர்வுகளில் மாணவ,மாணவிகள் சிறந்த மதிப்பெண் பெற பாடம் நடத்திய சிறந்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கு விருது வழங்கி கவுரிவிக்கப்பட்டனர். இதே போல பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு வெள்ளிப் பதக்கங்களுடன் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் நேரு வித்யாலாயா பள்ளியில் பயிலும் சிறு குழந்தைகள் மற்றும் மாணவ மாணவிகள் நடத்திய கலை நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் கண்டு பரவசம் அடைந்தனர்.
நிகழ்ச்சிகளுக்கான ஒருங் கிணைப்புகளை செயல் அலுவலர் சந்தோஷ் குமார் மற்றும் பள்ளி அலுவலர்கள் செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– சீனி,போத்தனூர்.