சாக்கடை கழிவுகளை சாலையில் போட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு!
விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுப்பார்களா?!
கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் அபிநந்த் மருத்துவமனை எதிரில் தக்காளி மார்க்கெட் அருகில் ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளது .இந்த பேருந்து நிலையத்திலிருந்து பொள்ளாச்சி வழியாக மற்ற ஊர்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இதன் வழியாக சென்று வருகிறது இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து தினமும் ஏராளமான பயணிகள் சென்று வருகிறார்கள் மேலும் கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரி வாகனங்களில் இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து சென்று வருகிறார்கள் இப்படி கூட்டமாக இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் தூர்வாரி செப்பனிடும் பணிக்காக சாக்கடை கால்வாயை திறந்து அதில் உள்ள கழிவுகளையும் மண்களையும் எடுத்து சாலையின் மீது போட்டு உள்ளார்கள் .இது கடந்த ஒரு வாரமாக அப்படியே சாலையில் கொட்டி கிடைக்கிறது.
இந்த பகுதியானது போத்தனூர் பகுதியில் இருந்து வரும் சாரதா மில் சாலையையும் பொள்ளாச்சி செல்லும் சாலையையும் இணைக்கும் பகுதியாகவும் பேருந்து நிறுத்தமாகவும் உள்ளதால் பேருந்துகள் பயணிகளை ஏற்றிக் கொண்டிருக்கும் பொழுது சாரதா மில் ரோடு பகுதியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் வந்து நின்று கொண்டிருக்கின்றன இந்த சமயங்களில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சாலையில் கொட்டப்பட்டுள்ள சாக்கடை கழிவு மண்ணால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிறிய இடைவெளிக்கு உள்ளே புகுந்து செல்கிறார்கள் இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது எனவே சாலையில் கொட்டப்பட்டுள்ள சாக்கடை கழிவுகளை அகற்றி தோண்டப்பட்டு கிடக்கும் சாக்கடை கால்வாயின் மறு சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலரின் வேண்டுகோளாக உள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.