சிங்கம்புணரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை! பொதுமக்கள் பாராட்டு!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி முத்தையா காலனியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரவியின் மனைவி காந்தி (வயது 48). இவர் நீண்ட நாட்களாக கடுமையான வயிற்று வலியால் வயிறு வீங்கியும், தொடர்ந்து வாந்தி வரும் நிலையிலும் அவதிபட்டு வந்துள்ளார். தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ள தகுந்த பொருளாதார வசதி இ்ல்லாத நிலையில் கடந்த ஜனவரி 3ஆம் தேதி அன்று காந்திக்கு நோயின் தீவிரம் அதிகரித்துள்ளது.

 


காந்தியின் கணவர் ரவி, அவரை சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ அங்கு உடனடியாக சிகிச்சையைத் துவக்கிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள், காந்திக்கு வயிற்றின் கீழ்புறத்தில் இருபுறமும் குடல் இறக்கம் இருப்பதையும் மேலும், இடது புறத்தில் ஏற்பட்டிருந்த அடைப்பின் காரணமாக சிறுகுடல் அழுகிய நிலையில் இருப்பதையும் ஸ்கேன் செய்து கண்டு பிடித்தனர். அதனைத்தொடர்ந்து தலைமை மருத்துவர் அய்யன்ராஜ், அறுவை சிகிச்சை நிபுணர் ஹரி பிரசாத் மற்றும் மயக்க மருந்து நிபுணர் சுபசங்கரி ஆகியோர் நடத்திய கலந்தாலோசனையில் காந்திக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர்.


உடனடியாக மறுநாள் (04/01/23) காலை மயக்க மருந்து நிபுணர் சுபசங்கரி மற்றும் செவிலியர்கள் உடனிருக்க அறுவை சிகிச்சை நிபுணர் ஹரி பிரசாத், காந்திக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அழுகிய நிலையில் இருந்த குடலை நீக்கி விட்டு மீண்டும் குடலை இணைத்தும், இருபுறமும் இருந்த குடலிறக்கத்தை வலை வைத்துத் தைத்து அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்தனர். அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த காந்தி, பத்து நாட்களில் இயல்பு நிலைக்குத் திரும்பினார். மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்த காந்தி தற்போது முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

50 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் சிங்கம்புணரி அரசு மருத்துவமனை வரலாற்றில் செய்யப்பட்டுள்ள முதல் பெரிய அறுவை சிகிச்சை இது என்பதால் மருத்துவர் அய்யன்ராஜ் தலைமையிலான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

மேலும், சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முழுவதும் 117 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவர்களின் இதுபோன்ற அக்கறையும் சாதனைகளும்தான், அரசு மருத்துவமனை குறித்து பொதுமக்களிடையே நம்பிக்கையை அதிகப்படுத்தும்.

– பாரூக் & ராயல் ஹமீது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp