கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தமிழ்நாட்டில் இருந்து உடுமலை வழியாக கேரளாவை இணைக்கும் சின்னாறு சாலையில் காட்டுத்தீ கட்டுப்படுத்த கேரளா வனத்துறை புதிய கட்டுப்பாடு அறிவித்துள்ளது. சின்னாரில் அமைந்திருக்கும் சோதனை சாவடியில் இருந்து மறையூரில் உள்ள சோதனை சாவடிக்கும் சுமார் 12 கிலோமீட்டர் தூரம் உள்ள பகுதியில் சுற்றுலா பயணிகளும் அது வழியாக செல்லும் நபர்களும் அங்கு உள்ள காடுகளையும் விலங்கினங்களையும் தொந்தரவு செய்யாமல் இருக்க காடுகளில் நெருப்பு வைக்காமல் இருக்க சின்னார் சோதனை சாவடியில் அவர்கள் கடக்கும் நேரத்தை குறித்து ஒரு பயண சீட்டு வழங்கப்படும் 40 நிமிடத்திற்குள் மறையூரில் உள்ள சோதனை சாவடியை கடக்க வேண்டும்.
தாமதமாகும் பட்சத்தில் அவர்கள் பெயரில் தாமதத்திற்கான காரணத்தை குறித்து விசாரணை நடத்தப்பட்டு பின்னர் அவர் கடந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அதிகாரிகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்கள் அந்த பகுதி வழியாக கடந்து செல்லுபவர்கள் இதை கருத்தில் கொண்டு கடந்து செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணார்.
One Response
Thank you for the information