செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கலையரங்கம் திறப்பு விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா..!!
கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கலையரங்கம் திறப்பு விழா மற்றும் சமத்துவ பொங்கல் விழா இன்று நடைபெற்றது.
தென் கோவையின் அடையாளமாய் விளங்கும் ஸ்டார் புரோமோட்டர்ஸ் அன் டவுன் சிட்டி டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் திரு.வெங்கடேஷ் அவர்கள் கலையரங்கம் பள்ளிக்கு கட்டி கொடுத்து அதை இந்நாளில் திறந்து வைத்தார்.உடன் நிறுவனத்தின் CEO திரு கணேஷ் மற்றும் செட்டிப்பாளையம் பேரூராட்சி தலைவர் ரங்கசாமி,பேரூராட்சி செயலாளர் நாகராஜ்,கவுன்சிலர் சந்தோஷ் ,பள்ளி தலைமை ஆசிரியர் தேவகி மற்றும் பள்ளி ஆசிரியர்கள்,செட்டிப்பாளையம் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்,மாணவ மாணவிகள் பெற்றோர்கள் அனைவரும் கலையரங்கம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
தொடர்ந்து சமத்துவ பொங்கல் செய்து படையல் இட்டு, அனைவருக்கும் வழங்கப்பட்டது.
விழாவில் பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் ஆடல் பாடல் கிராமத்து பாடல் ஒலியுடன் மாணவர்கள் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோலப்போட்டி,கலை நிகழ்ச்சியில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஸ்டார் புரோமோட்டர்ஸ் அன் டவுன் சிட்டி டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் திரு.வெங்கடேஷ் அவர்கள் பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்.