சென்னை ஜாம்பஜார் அருகே கஞ்சா சாக்லேட் விற்ற பிஹார் இளைஞர் கைது!!
சென்னை ஜாம்பஜார் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல்கிடைத்தது. இதன் அடிப்படையில் தியாகராயகர் உதவி ஆணையரின் தனிப்படையினர், அப்பகுதியில் நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். இதில் ஜாம்பஜார், மீரான் சாகிப் தெருவில் உள்ள ஒரு பீடா கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார், அந்தகடையில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக அந்தக் கடையைநடத்தி வந்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்திரா யாதவ் (39) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் பதுக்கி வைத்திருந்த 7 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ருக்மாங்கதன் வ.
வட சென்னை.