தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ் நாட்டில் திமுக ஆட்சி வந்த நாள் முதல் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் ஆளுநர் சம்பந்தப்பட்ட நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசுக்கும், அரசியல் சட்டத்திற்கும் புறம்பாக செயல்படும் கவர்னரை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் திருச்செந்தூர் ரோடு காமராஜ் கல்லூரி எதிர்புறம் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், மத்திய அரசு கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி கண்டன உரையாற்றினர்.
ஆர்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் அருள், மண்டல தலைவர்கள் சேகர், ஐசன்சில்வா, செந்தூர்பாண்டி ராஜன், மகிளா காங்கிரஸ் தலைவி தனலெட்சுமி, பீரித்தி,சாந்தி, அமைப்புசாரா மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், ஐஎன்டியூசி மாநில பொது செயலாளர் ராஜ்,ஐஎன்டியூசி ராஜா,சுப்பிரமணி, வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஜான்சாமுவேல்,சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன்,கலை பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ், மாமன்ற உறுப்பினர் போஸ், மாவட்ட தூணை தலைவர்கள் பிரபாகரன், அருணாசலம், விஜயராஜ்,மணி, ராதாகிருஷ்ணன், ஜெயராஜ், கிருஷ்ணன்,சின்னகாளை, மாவட்ட பொது செயலாளர் மைக்கேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-முனியசாமி ஓட்டப்பிடாரம்.