வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக எச்சரிக்கை விடுக்கும் விதமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதுபோல் சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வடகிழக்கு பருவ ஆண்டில் போதிய அளவில் மழை இல்லை.வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால், ஒட்டப்பிடாரம் பகுதியில் உள்ள கண்மாய்கள் ஏதும் நிரம்ப இல்லை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம் பெரிய அளவில் பாதிப்பு. ஒட்டப்பிடாரம் பகுதி நீர்ப்பாசன வசதி இல்லாத பகுதியாகும் மழை பெய்தால் மட்டுமே விவசாயம். இயல்பைவிட வட கிழக்கு பருவமழை குறைவாக பெய்துள்ளதாலும், கடும் வறட்சி காரணமாகவும் இந்த தாலுகா பகுதியில் ஒரு கண்மாய் கூட நிரம்பவில்லை. இதனால் கண்மாய் பாசனம் மூலம் நடைபெறும் நெல் விவசாயம் இந்த ஆண்டு ஒட்டப்பிடாரம் பகுதியில் இல்லை.
விவசாய சங்கம் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் உளுந்து, பாசிப்பயறு, மக்காசோளம், மிளகாய் உள்ளிட்ட அனைத்து பயிர்களிலும் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.