தொடரை முழுமையாக கைப்பற்றுமா இந்தியா?
இந்தியா, நியூசிலாந்து இடையே 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா தொடரை முழுமையாக கைப்பற்றும் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய போட்டி 1.30 மணிக்கு தொடங்குகிறது.
-அருண்குமார் கிணத்துக்கடவு.