ராமநாதபுரம் அடுத்த சிங்காநல்லூர் அருகேயுள்ள டி. வி. எச். , அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் குருபிரசாத், 48; ஐ. டி. , நிறுவன ஊழியர்.
மனைவி ஸ்வர்ணலதா, 43; மாற்றுத்திறனாளி, கடந்த, 2012 முதல் கடந்தாண்டு. அக், வரை. நஞ்சுண்டாபுரம் சாலையில், ராயல் ஷெரட்டன் அடுக்குமாடி குடியிருப்பில், பிரபு என்பவரது வீட்டில் குடியிருந்தனர். அப்போது தனது மனைவிக்காக விலங்குகள் நல அமைப்பு ஒன்றிலிருந்து நாய் ஒன்றை தத்தெடுத்தார்.
நாயை வீட்டில் வளர்க்க குடியிருப்பிலுள்ள சங்க தலைவர் அஜித், செயலாளர் சுமதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பல வகையிலும் இடையூறு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போத்தனூர் போலீசில் குருபிரசாத் புகார் செய்தார். போலீசார் விசாரித்து சென்றுள்ளனர்.
இருப்பினும் தொந்தரவு நிற்கவில்லை. கடந்த செப். , முதல், நாள் ஒன்றிற்கு 500 ரூபாய் வீதம் நாய் வளர்த்த தற்கு கட்டணம் கேட்டுள்ளனர். குருபிரசாத் தர மறுத்தார், இதையடுத்து அக். , ல் காவலாளிகள் உதவியுடன் நிர்வாகிகள் இருவரும், குருபிரசாத்தை வீட்டை காலி செய்ய வைத்தனர். மன உளைச்சலுக்கு ஆளான குருபிரசாத் முதல்வரின் தனிப்பிரிவிலும்,
போலீஸ் கமிஷனரிடமும் புகார் செய்தார். விசாரித்த போலீஸ் கமிஷனர், போத்தனூர் போலீசாரை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதனடிப்படையில் போலீசார் அஜித், சுமதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.