நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20: போட்டியில் இந்தியா திரில் வெற்றி!!
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நேற்றிரவு நடந்தது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆடுகளம் சுழல் ஜாலத்துக்கு கைகொடுக்க அந்த அணியில் களமாடிய டாப் ஆடர் வீரர்களான ஃபின் ஆலன் (11), டெவோன் கான்வே (11), மார்க் சாப்மேன் (14) என சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பிறகு வந்த க்ளென் பிலிப்ஸ் (5), டேரில் மிட்செல் (8) ஒற்றை இலக்கங்களில் தங்களின் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சான்டனர் 19 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி 98 ரன்கள் எடுத்தது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அடுத்து 100 ரன் தேவை என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் சுப்மான் கில் 11 ரன்னிலும், இஷான் கிஷன் 19 ரன்னிலும், ராகுல் திரிபாதி 13 ரன்னிலும் வெளியேறினர்.
சூர்யகுமார் யாதவுடன், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து முடிவில் இந்திய அணி 19.5 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றிபெற்றது.
சூர்யகுமார் யாதவ் 26 (31) ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 15 (20) ரன்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.
-அருண்குமார் கிணத்துக்கடவு.