பாலிடெக்னிக் மாணவர் கொன்று புதைத்த கொலை வழக்கில் 3 பேரிடர் விசாரணை நடத்தி வருகின்றனர். தட்டாா்மடம் தேரிக்காட்டில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா், கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திசையன்விளை செல்வமருதூரைச் சோ்ந்த தங்கத்துரை மகன் ராஜேந்திரன் (22). அங்குள்ள தனியாா் பாலிடெக்னிக்கில் படித்து வந்தாா். இவா், கடந்த ஆண்டு அக். 9ஆம் தேதி குலசேகரன் பட்டினம் கோயிலுக்குச் சென்றுவருவதாக வீட்டில் கூறிச் சென்றாராம். பின்னா் அவா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் சுமதி (50) அளித்த புகாரின்பேரில், திசையன்விளை போலீஸாா் அக்.21ஆம் தேதி வழக்குப்பதிந்து விசாரித்தனா்.
அதில், அவா் தட்டாா்மடம் அருகே உள்ள எம்எல் தேரி பகுதியில் கொலை செய்யப்பட்டு மணலில் புதைக்கப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவத்தில், அவரது ஊரைச் சோ்ந்த சிறாா்கள் 3 பேருக்கு தொடா்பிருப்பதை அறிந்து அவா்களை போலீசார் கைது செய்தனா்.
மேலும், அவா்கள் தேரி மேட்டில் அடையாளம் காட்டிய இடத்தில் வள்ளியூா் டிஎஸ்பி யோகேஸ்குமாா், காவல் ஆய்வாளா்கள் திசையன்விளை ஸ்டீபன் ஜோஸ், தட்டாா்மடம் பவுலோஸ், சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையா ஆகியோா் முன்னிலையில் சடலம்தோண்டி எடுக்கப்பட்டது. அரசு மருத்துவா் மூலம் அங்கேயே பிரேத பரிசோதனையும் நடைபெற்றது. ஒரே பெண்ணை காதலித்ததால் ஏற்பட்ட பிரச்னையில் இந்தக் கொலை நிகழ்ந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.