பிரபல கண் மருத்துவமனைக்கு அபராதம் நீதிமன்றம் தீர்ப்பு !!!
தூத்துக்குடியில் சேவை குறைபாடு காரணமாக பிரபல கண் மருத்துவமனைக்கு அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தூத்துக்குடி மில்லர்புரம் பாரதிநகரை சேர்ந்தவர் சரவணன்(46). வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தூத்துக்குடி உள்ள கண் மருத்துவமனைக்கு சாதாரண பரிசோதனைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரது கண்ணில் மருந்தை ஊற்றி பரிசோதித்துள்ளனர்.
மேலும் அவரது கண்ணை ஸ்கேன் செய்துள்ளனர். அதன் பிறகு அவரை கண் அறுவை சிகிச்சை அறைக்குள் அழைத்து சென்று கண்ணில் மருந்து ஊற்றியுள்ளனர். மேலும் அவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய முயன்றுள்ளனர்.
சாதாரண பரிசோதனைக்கு வந்த தன்னை அறுவை சிகிச்சை வரையிலும் கொண்டு செல்கிறார்களே என அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து விசாரித்துள்ளார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்போது அங்கிருந்த ஊழியர்கள் ஒரே பெயர் காரணமாக தாங்கள் மாற்றி இவ்விதம் அறுவை சிகிச்சைக்கு அழைத்து சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் அங்கிருந்து வெளியே வந்துள்ளார். மேலும் அவரை தொடர்பு கொண்ட அந்த மருத்துவமனை ஊழியர்கள் தவறாக செய்த ஸ்கேன் மற்றும் பரிசோதனைக்கு பணத்தை கட்டாயமாக பெற்று கொண்டு அவரை அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் மனம் உளைச்சலுக்கு ஆளான சரவணன் தூத்துக்குடி நுகர்வோர் கோர்ட்டில் இது குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர் அந்த மருத்துவமனை அஜாக்கிரதையாகவும், சேவைக்குறைபாடாகவும் நடந்து கொண்டதுடன் தனக்கு தவறாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முயன்றதால் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது எனவும் இதற்காக அந்த மருத்துவமனை இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கினை தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் தலைவர் மற்றும் உறுப்பினர் ஆகியோர் விசாரித்தனர். மேலும் கவனக்குறைவாகவும், சேவை குறைபாடுடனும் நடந்து கொண்ட அந்த கண் மருத்துவமனை நிர்வாகம் சரவணனுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாகவும், வழங்கும் வரையில் 9% வட்டியுடனும், அவரிடம் இருந்து பரிசோதனைக்கு பெறப்பட்ட தொதை ரூ.5 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை வழங்கவேண்டும் என தீர்ப்பளித்துள்ளனர். தூத்துக்குடியில் பிரபல கண் மருத்துவமனை சேவை குறைபாடு காரணமாக அபராதம் விதித்து தீர்ப்பு .
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– முனியசாமி ஓட்டப்பிடாரம்.