கோவை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய போதைப் பொருள்களுக்கு எதிராக காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், செயல்பட்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மத்தம்பாளையம் பகுதியில் போதைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த கிட்டுசாமி என்பவரது மகன் கோவர்தனன் (23 ), சௌந்தர்ராஜன் மகன் பிட்டு பிரவீன் (எ) பிரவீன்குமார் (21) மற்றும் கணேசன் என்பவரது மகன் நவீன்குமார் (21) என்பவர்களை கைது செய்து அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 200 கிராம் கஞ்சா, 208-போதை ஏற்படுத்தக்கூடிய மாத்திரைகள் மற்றும் 4-சிரஞ்சுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
போதை பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார். போதைப்பொருட்கள் விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.