பொள்ளாச்சியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 126 ஆவது பிறந்தநாள் விழா..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 126 ஆவது பிறந்தநாள் விழா பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையினரால் கொண்டாடப்பட்டது.
நேதாஜியின் பிறந்த நாளை பள்ளியில் மரக்கன்றுகள் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நேதாஜி குறித்த போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நேதாஜி இளைஞர் பேரவையின் தலைவர் வெள்ளை நடராஜ் தலைமை தாங்கினார். பேரவை செயலாளர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களிடையே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொள்ளாச்சி என். ஜி .எம் கல்லூரி முதல்வர். டாக்டர் ஆர். முத்துக்குமரன் நேதாஜியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மாணவர்களிடையே நேதாஜி வீர வரலாறு குறித்தும் சிறப்புரையாற்றினார்.
ராயல் அரிமா சங்கத் தலைவர் மணிரத்தினம் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி பள்ளியில் மரக்கன்று நடுகிற நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசினார்.
நேதாஜி குறித்த கட்டுரை போட்டி பேச்சுப்போட்டி பாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட பள்ளி மாணவர்களுக்கு பொள்ளாச்சி நகைக்கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் விசு (எ) விசுவநாதன் பரிசுப் பொருட்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பட்டாம்பூச்சி குழும ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்
ச. தர்மராஜ்.மற்றும் நிர்வாகிகள் வே.காளிமுத்து. ஜெய் லாப்தீன்.நகர் மன்ற உறுப்பினர்கள் இந்திராணி கிரி. எம்.கே சாந்தலிங்கம்
நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் வேல்விழி ஞானம். குழந்தைவேலு பள்ளி மேலாண்மை குழு தலைவர் தனலட்சுமி உள்ளிட்டோர் பள்ளி மாணவர்களிடையே நேதாஜி குறித்தும் நேதாஜியின் வரலாறு குறித்தும் சிறப்புரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து நேதாஜி பிறந்தநாளில் பள்ளி மாணவர்களுடைய போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஜுபீர் ஹரி கிருஷ்ணன் நவீன் குமார் விக்கி அமுதன் பாலமுருகன் செந்தில் குமார் யதோ கிருஷ்ணன் ஹரிஷ் கண்ணன் தினேஷ் முத்தமிழ் யஸ்வந்த் உள்ளிட்ட பேரவை நிர்வாகிகளும் உறுப்பினர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் அனைத்து ஆசிரிய பெருமக்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் என். செந்தில்குமார் நன்றியுரை ஆற்றினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.