இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாள் ஜனவரி 23 அன்று ஆண்டுதோறும் சிறப்பாக அனுசரிக்கப்படும். நேதாஜியின் 126 வது சிறப்பு வாய்ந்த பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையின் தலைவர் ஆர் .வெள்ளை நட்ராஜ் கூறும்போது:
இந்திய சுதந்திர வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாக போராடி வென்றெடுத்த மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 126 ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையிலும் நேதாஜியின் புகழையும் வீரத்தையும் இந்த தலைமுறை மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியாகவும் நேதாஜி அவர்களின் உருவம் பொரித்த பழைய நாணயங்கள் குறிப்பாக ஐந்து ரூபாய் நாணயம் பத்து ரூபாய் நாணயம் நூறு ரூபாய் நாணயம் மற்றும் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள்எதுவாக இருப்பினும் அதை சேகரித்து வைத்துள்ள நாணயவியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எங்களது அமைப்பிடம் கொண்டு வந்து மாணவர்களின் பார்வைக்கும் பொதுமக்கள் பார்வைக்கும் வைப்பவர்களுக்கு பேரவை சார்பில் பரிசுகளும் பாராட்டும் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார் .
அவ்வாறு பழைய நாணயங்கள். ரூபாய் தார்கள் கைவசம் சேகரித்து வைத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கீழ்கண்ட அலைபேசி எண்களில் அழைத்து பதிவு செய்து கொள்ளுமாறும், அன்று வரும் 23 ம் தேதி திங்கட்கிழமை பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதியம் மூன்று மணியளவில் நடைபெறவுள்ள நேதாஜியின் பிறந்தநாள் விழாவின் போது இந்த நாணயங்கள். ரூபாய் நோட்டுகள் மாணவர்களின் பார்வைக்கு காண்பித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றுச்செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள்: 9344821196 944584 1196.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி.