மக்கள் மத்தியில் பாராட்டுப் பெறும் தன்னார்வலர் திருமதி ராஜலெஷ்மி சிவக்குமார்!!
கன்னியாகுமாரி மாவட்டம், தோவாளை தாலுகாவிற்குட்பட்ட பூதப்பாண்டி வடக்குத்தெருவில் வசிக்கும் திருமதி.இராஜலெட்சுமி சிவக்குமார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சுற்றுச்சூழல் செயலாளராக பணியாற்றிவருகிறார்.
மேலும் பூதப்பாண்டி பா.ஜீவானந்தம் அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளிமேலாண்மைக்குழுவில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திலும் தன்னார்வலாராக பணிபுரிந்து வருகிறார். பணியாற்றிய காலத்தில் சுமார் 1 இலட்ச ருபாய் மதிப்பில் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கியுள்ளார்.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுற்றுச்சூழல் முறையில் பா.ஜீவானந்தம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி பின்புறமுள்ள சாதிய மாட்டுச்சாணத்தினை அகற்றி பள்ளிக் குழந்தைகளுக்கு நோய்தொற்று உருவாகத வண்ணம் செயல்பட்டார்.
தற்போது அரசு விடுமுறை நாட்களில் பள்ளிக்குழந்தைகளுக்கு தனது வீட்டில் வைத்து நாட்டுப்புற பாடல்கள்,பெண்கல்வி விழிப்புணர்வு பாடல்கள், விழிப்புணர்வு நாடகங்கள்,ஓவிய பயிற்சி,திருக்குறள்,ஜீவா,பாரதி,காந்தி,தேச தலைவர்கள் பற்றி உரையாடல் மற்றும் கட்டுறை உள்ளிட்ட பயிற்சிகளை இலவசமாக பள்ளிக்குழந்தைகளுக்கு வழங்கினார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதன் மூலம் அப்பகுதியில் உள்ள எழை ஏளிய பள்ளிக்குழந்தைகளுக்கு பயனுள்ளதாக அமைந்தது. இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை பாகுபாடு இன்றி அவரை நேரிலும் சமூக வலைதளங்களிலும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நல்லோருக்கு நல்லதே நடக்கட்டும் என்ற சிந்தனையோடு
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தமிழகத் துணைத் தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.