மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம்.! தண்ணீர் இன்றி தவிக்கும் பொதுமக்கள்.!!
கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் உள்ள 99 மற்றும் 100வது வார்டு இணையும் பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக உப்பு தண்ணீர் வருவதில்லை என்றும் அதனால் அங்கு குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் குமரன் அவர்கள் கூறுகையில்:-
செட்டிபாளையம் சாலை, ஈஸ்வரன் நகர் அருகில் சாலை விரிவாக்க பணி நடந்து கொண்டு வருகிறது ஆகையால் தண்ணீர் குழாய்கள் உடைவதும் மாற்றுவதும் சகஜம் தான் ஆனால் கடந்த மூன்று மாதங்களாக குழாய்களை சரி செய்யாமல் பொதுமக்களை அல்லோலபடுத்தி வரும் மக்கள் பிரதிநிதி மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தன போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள ஆளுங்கட்சி வட்ட செயலாளரிடம் எங்களுடைய பகுதிக்கு உப்பு தண்ணீர் வருவதில்லை என்று புகார் அளித்திருந்தோம் அவர் கண்டு கொள்வதாக தெரியவில்லை, அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவித்த பொழுது இதோ அழைக்கிறேன் என்று கூறினார்.!! ஆனால் இது நாள் வரை அழைக்கவில்லை.
அதிகாரிகளிடம் கூறினால் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எண்ணி தெற்கு மண்டல மாநகராட்சி பொறியாளரை அழைத்து தகவல் கூறினோம் அவரும் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார் ஆனாலும் கூட இதுவரை எங்களுக்கு உப்பு தண்ணீர் வந்து சேர்ந்த பாடில்லை, ஆகையால் வேறு வழி இல்லாமல் ஊடகத்தின் உதவியை நாடியுள்ளோம் இதற்கு மேலும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு உப்பு தண்ணீர் வருவதை உறுதி செய்யவில்லை என்றால் கண்டிப்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் தந்தி அனுப்பும் போராட்டம் நடத்துவோம் என்று கூறிக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து நமது இதழின் ஆசிரியர் கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பொறியாளரை தொடர்பு கொண்டு விவரம் கேட்ட பொழுது சார் உடனடியாக இந்தப் பகுதியில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார் பொறுத்திருந்து பார்ப்போம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-அருண்குமார். பிலால்.