திருமணமான பெண்களுக்காக தென்னிந்திய அளவில் நடைபெற்ற அழகிப்போட்டியில் கோவையை சேர்ந்த பெண் மிஸஸ் தமிழ்நாடு என்ற பட்டத்தை வென்றுள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் மிஸஸ் தென் இந்திய அழகி போட்டி 2023 நடைபெற்றது. இப்போட்டிக்கு தென்னிந்திய மாநிலங்களில் இருந்து 14 பேர் இறுதி போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் கோவையை சேர்ந்த ஷாலு ராஜ் என்பவர் மிஸஸ் தென் இந்திய அழகி போட்டியில் 2வது இடத்தையும், மிஸஸ் தமிழ்நாடு அழகி பட்டத்தையும் வென்றுள்ளார். இந்த அழகிப்போட்டியில் வெற்றி பெற்ற ஷாலு ராஜூவுக்கு மத்திய நிதி அமைச்சகத்தின் முதன்மை ஆணையர் ஸ்ரீராம் பரத் முடிசூட்டினார். மிஸஸ் தென் இந்திய அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குதங்க கிரீடம் சூட்டப்பட்டது!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.