மீனாட்சிபுரத்தில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் மத நல்லிணக்க உண்ணாவிரதப் போராட்டம்! – ஏன் எதற்கு ??
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, தமிழக கேரளா எல்லை பகுதியான கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்தூர் தாலுக்கா, பெருமாட்டி கிராம பஞ்சாயத்து உட்பட்ட
மீனாட்சிபுரம்.
தமிழகம் கேரளாம் என இரு மாநிலத்துக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் பகுதி மக்கள்
எண்ணத்தால் குணத்தால் செயலால் வேறுபட்ட மனிதர்கள் ஆனால் ஒருவொருக்கொருவர் சார்ந்து சேர்ந்து வாழ்வதே சமுதாயம் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வாழ்கின்றனர்.
இவர்களின் மொழி. சமயம், கலாச்சாரம், இனம் என வேறுபட்டவர்களாக இருந்தாலும்
ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியர்கள் என்ற ஒரு உணர்வு இவர்கள் அனைவரையும் ஒன்றிணைகின்றது. ஒருவொருக்கொருவர் விட்டு கொடுத்து வேற்றுமையில் ஒற்றுமையாய் வாழ்வதே லட்சியமாக கொண்டுள்ளனர்.
இவர்களின் முன்னோர்கள் சமுதாய ஒற்றுமை உணர்வை பேணி பாதுகாத்து வளர்த்து வந்தார்கள். ஒற்றுமையினால் தான் இந்த அன்பான சமுதாயத்தை ஜாதிகள், மொழிகள் கடந்து கட்டமைத்தார்கள்.
மத நல்லிணக்கத்தாலும் சகிப்புத்தன்மையாலும் அன்பாலும் பண்பாலும் உள்ளங்களை வென்றெடுத்தார்கள். என்கின்றனர் இப்போதைய தலைமுறையினர்.
மேலும் இதனால் தான் இந்த மீனாட்சிபுரம் பொது அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது என்று கூறுகின்றனர்.
முன்னோர்கள் காட்டிய வழியில், ஒரு ஊரின் பாரம்பரியம் கலாசாரம் அங்கே வாழும் அனைத்து மதங்களின், மக்களின் ஒற்றுமையின் மூலமே பேணி பாதுகாக்கப்படும் என்பதை வலியுறுத்தி மத நல்லிணக்க அடையாள உண்ணாவிரதம் போராட்டம் அனைத்து காட்சிகள் சார்பில் மீனாட்சிபுரத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த மத நல்லிணக்க அடையாள உண்ணாவிரத போராட்டம் எதற்காக என்று தெரிந்து கொள்வோம்.
மீனாட்சிபுரம் வாழ் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு மயானத்திற்காக வாங்கப்பட்டுள்ள இடத்தில் மயானம் (கபர்ஸ்தான்) அமைத்திட ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் பொது மக்கள் ஆதரவு கோரி இஸ்லாமியர்கள் மத நல்லிணக்க உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்து அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தனர்.
அதன்படி அனைத்து கட்சிகளின் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நேற்று 10.01.2023 செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மீனாட்சிபுரம் கேரள பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய சமூகத்திற்காக ஆதரவாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஜனதா,
அ.இ.அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை நிறைவு செய்து வைத்தார் திரு. ஜெகதீஷ்கவுண்டர், விவசாய சங்கம், இராமர் பண்ணை முத்துசாமிபுதூர்.
மேலும் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு கேரள மாநில வியாபார விவசாய சமிதி CITUI,NTUC,HMS தொழிற்சங்கங்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தமிழக துணைத் தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.