முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் மறைவையொட்டி சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது…!!
முன்னாள் போப் 16-ம் பெனடிக்ட் மறைவையொட்டி அவரது ஆன்மா சாந்தியடையும் வகையில், ராமநாதபுரம் ஹோலி டிரினிட்டி தேவலாயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது.
95 வயதான 16-ம் பெனடிக்ட் முன்னால் போப், முதுமை தொடர்பான உடல்நலக் கோளாறுகளால் உயிரிழந்தார்..இந்நிலையில் அவரது மறைவையொட்டி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இரங்கல் கூட்டம் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கோவை, ராமநாதபுரம் சீரோ மலபார் மறை மாவட்டம் சார்பாக, ராமநாதபுரம் ஹோலி டிரினிட்டி தேவலாயத்தில் மறைந்த போப்பாண்டவரின் ஆன்மா சாந்தியடைய சிறப்பு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.. ராமநாதபுரம் மறைமாவட்ட ஆயர் டாக்டர் மார் பால் ஆலப்பாட் தலைமையில் நடைபெற்ற இதில்,சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனையும் நடை பெற்றது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிஷப் பால் ஆலப்பாட் மறைந்த போப் 16 ஆம் பெனடிக்ட் எட்டு ஆண்டு காலமே பதவியில் இருந்த போதும், கத்தோலிக்க சபையின் வளர்ச்சியிலும், திருச்சபையின் விசுவாசிகளுக்கு இறையியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் திருச்சபையின் போதனைகளை வெளியிடுவதிலும் முக்கிய பங்கு வகித்த சிறந்த இறை நேசர் என தெரிவித்தார்…அஞ்சலி பிரார்த்தனை கூட்டத்தில் மறை மாவட்டத்தில் உள்ள அருட் தந்தையர்கள், மத போதகர்கள்,பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– சீனி,போத்தனூர்.