கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணாறு பகுதியை பொங்கல் மற்றும் கார்த்திகை தீபம் திருவிழாவை முன்னிட்டு அங்கு கரும்பு விற்பனையானது நடைபெற்றது. அதில் உள்ள கரும்பு சோகைகள் அகற்றுவதற்காக மூனார் பஞ்சாயத்தில் இருந்து ஒவ்வொரு வியாபாரியிடம் இருந்தும் சுமார் 1000 முதல் 3000 வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது ஆனாலும் பொங்கல் விடுமுறை கடந்து இத்தனை தினங்களாகியும் கரும்பு கழிவுகள் இன்னும் அகற்றப்படாமல் அப்படியே இருப்பது வேதனையாக உள்ளது,
பல நாடுகளிலிருந்து பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடத்தில் இவ்வாறான கழிவுகள் ஆங்காங்கே குவிந்து கிடப்பது வரும் சுற்றுலா பயணிகளுக்கு முகம் சுழிக்க வைக்கிறது, மட்டுமல்லாது சிறு காஷ்மீராக கருதப்படும் சுற்றுலா பகுதி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என பகுதியில் வசிக்கும் வியாபாரிகளும் பகுதி மக்களும் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார் எனவே அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் இதனை சுத்தம் செய்து நகரத்தை சுத்தமான நகரமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன் மூணார்.