வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்து உள்ள உருளிக்கள் எஸ்டேட் இரண்டாவது பிரிவு பகுதியில்(டாட்டா டீ எஸ்டேட்) உள்ள ஆறு வீடுகள் கொண்ட குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் காலை சுமார் 10 மணி அளவில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த தீயானது அதி விரைவாக அருகில் உள்ள மற்ற வீடுகளுக்கும் பரவியது.இதனைக் கண்ட அருகில் உள்ள தொழிலாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு எஸ்டேட் நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும்,108 அவசர சிகிச்சை வாகனத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
அனைவரும் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் குடியிருப்பு பகுதியில் யாரும் இல்லாத காரணத்தினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனதெரிகிறது.
ஆனால் வீடுகளில் உள்ள பணம் நகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமாகி உள்ளதாக தெரிகிறது. தொழிலாளர்களின் துணிமணிகள் பாத்திரங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை தீ விபத்தில் எரிந்து நாசமாகி உள்ளதாக தெரிகிறது.
தீயை முற்றிலும் அணைத்துவிட்டு வீடுகளுக்குள் சென்று பார்த்தால் தான் எவ்வளவு பொருட்கள் சேதம் ஆகியுள்ளன என்பதையும் சேதமதிப்பைை கணக்கிட முடியும் என்றும் அருகில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.