கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட சோலையார் டேம், சேடல் டேம் பகுதியில் உள்ளஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் விழாவில். தனி நபர் ஒருவரின் முன் விரோதம் காரணமாக கோவில் கமிட்டிக்கு உட்பட்ட நபர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கூறுகையில் அனைவருக்கும் வணக்கம்
சேடல் டேம் பகுதியில் ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் கமிட்டி க் களின் அராஜகம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது கணக்கு வழக்கு காட்டும் போது நடந்த பிரச்சினைகளை காரணம் காட்டியும் மேலும் நான் தாழ்த்த பட்ட சாதியே சேர்ந்தவன் என்பதாலும் மேலும் நான்
தி.மு.கா.கரான் என்பதாலும் குறி வைத்து என்னையும் என் குடும்பத்தையும் தாக்கி வருகிறார்கள்
இவர்களிடமிருந்து எனக்கும் என் குடும்பத்துக்கும் பாதுகாப்பு கேட்கிறேன் என்றார்.
இப்பிரச்சனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தமிழக துணை தலைமை நிருபர்
-M.சுரேஷ்குமார்.