கோவை மாவட்டம் போத்தனூர், 99 வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகர் பகுதியில் இன்று காலை ஸ்ரீராம் நகர் பகுதியில் நடைபெற்ற வரும் தார் சாலை அமைக்கும் பணியையும் செட்டிபாளையம் ரோடு வெள்ளலூர் ரோடு பகுதிகளில் நடைபெற்று வரும் பணியினையும் கோணவாய்க்காகள் பாளையத்தில் உள்ள பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருக்கும் ராஜவாய்க்காலையும்,
மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் அவர்களும் கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் கோவை மாநகராட்சி ஆளும் கட்சி தலைவர் இரா கார்த்திகேயன் . இன்று பார்வையிட்டனர்.
உடன் 99வது மாமன்ற உறுப்பினர் மு அஸ்லாம் பாஷா.மற்றும் வட்ட கழக செயலாளர் முரளிதரன், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர்
முகமது ஜின்னா, 99 வது வட்ட அவைத்தலைவர் சம்சுதீன், சாதிக், ரேஷன் கடை நடராஜன், ரமேஷ் மற்றும் திமுக கட்சியினர் உடன் இருந்தனர்.
அந்தப் பகுதியில் இருக்கும் பிரச்சினைகளை பொதுமக்களுடன் சாதிக், KS.மோகன் ஆகியோர் மாநகராட்சி ஆணையரிடம் கூறினார்கள். குப்பையில் இருந்து வீசும் துர்நாற்றம் மற்றும் தண்ணீர், சாக்கடை பிரச்சனைகளை பொதுமக்கள் முன் வைத்தனர். இதனை உடனடியாக சரி செய்து தருவதாக மாநகராட்சி ஆணையர் கூறியதுடன் இன்று ஸ்ரீராம் நகர் பகுதியில் மருத்துவ முகாம் ஒன்றை உடனடியாக ஏற்பாடு செய்து, மாநகராட்சி ஆணையர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தலைமை நிருபர்,
-ஈசா.