65 கிலோ சந்தன கட்டைகள் காரில் கடத்தல் மூன்று பேர் கைது??
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள மறையூர் பகுதியில் இருந்து சுமார் 65 கிலோ எடையுள்ள சந்தன கட்டைகளை சிறு துண்டுகளாக வெட்டி கடத்த முயன்ற மூவர் கைதுசெய்யப்பட்டனர்.
முகமது சாலி,க் மன்சூர் மற்றும் இஷாத் மூவரும் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாகவே மறையூர் வந்து ஒரு லாட்ஜில் தங்கி உள்ளனர். அங்கே சுமார் 65 கிலோ மதிப்புள்ள சந்தன கட்டைகளை வாங்கியும் உள்ளனர். அதில் 25 கிலோ சந்தன கட்டை மிகவும் பழமையான கட்டை என்பதால் அந்த பணத்தை திருப்பித் தருமாறு அவர்கள் கேட்க அதற்காக இரண்டு நாட்கள் ஆகியுள்ளன மீதி பணத்தை மறையூர் பெட்ரோல் பங்க் அருகில் வந்து தருவதாக சந்தன கட்டையை விற்ற நபர்கள் கூறியுள்ளனர்.
பணத்தை வாங்குவதற்காக மூவரும் கர்நாடக பதிவை என்னை கொண்ட ஷிப்ட் காரில் வந்துள்ளனர். அங்கே சோதனை செய்து கொண்டிருந்த வனத்துறை அதிகாரிகள் காரில் உள்ளவர்களிடம் விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் உடனடியாக அவர்கள் தங்கி இருந்த லாட்ஜுக்கு அவர்களை அழைத்து சென்றனர்.
அங்கே சென்று பார்த்த பொழுது 65 கிலோ சந்தன கட்டை மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் யார் என்பதை சோதனை செய்து பார்க்கும் பொழுது அவர்கள் கொண்டு வந்த காரின் கர்நாடக பதிவு எண் போலியானது என்பதையும் கண்டுபிடித்து உள்ளனர்.
மறையூர் டெபுட்டி பாரஸ்ட் ரேஞ்சர் ஆபிஸர் வி.ஆர்.ஸ்ரீகுமார் அவர்களின் தலைமையில் மேலும் இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்
மூணார்.