ஆனைமலை டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமப் பகுதியில் சுற்றித் திரிவதால் மக்கள் பீதி!!
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் ஊருக்குள் புகுந்த மக்னா யானை பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் வனத்துறையினர் அந்த யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து சின்னத்தம்பி என்ற குமிக்க யானை பாலக்கோடு பகுதிக்கு கொண்டு சென்று மக்னா யானையைப் பிடித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்பு அந்த யானை டாப்சிலிப் கொண்டு வந்து வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது கடந்த சில தினங்களாக வனப்பகுதியிலேயே சுற்றித்திரிந்த மக்னா யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி சேத்துமடை, ஆனைமலை வழியாக வந்த யானை நல்லூத்துக்குளி, பாலக்காடு ரோடு, ராமநாதபுரம், ஜலத்தூர், காக்கா புதூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வனத்துறையினர் 4 குழுவாகப் பிரிந்து மக்னா யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.
நாளைய வரலாறு வாசகர்கள் அனைவருக்கும் சர்வதேச தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள்.