ஆனைமலை பொள்ளாச்சி சாலையில் இஸ்லாமியர்கள் திடீரென சாலை மறியல்…!!!
கோவை மாவட்டம் ஆனைமலை அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பாக ஆனைமலை சின்னபள்ளி வாசல் அருகே பொள்ளாச்சி சாலையில் பிப்ரவரி ஒன்றாம் தேதி இன்று காலையில் சுமார் 11 மணியளவில் இஸ்லாமியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் அவர்கள் தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்ட இஸ்லாமியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் இதனால் இவ்வழியாக பொள்ளாச்சி மற்றும் சேத்துமடை செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திக்காக
-அலாவுதீன் ஆனைமலை.