இந்தியாவின் அனைத்து இடங்களிலும் கால் பதிக்க திட்டம், தமிழக முழுவதும் ஹெல்த் வாக்கிங் திட்டம் விரைவில் அறிமுகம் மா சுப்பிரமணியம் பேச்சு.. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் கால் பதிக்க திட்டம் உள்ளதாகவும் தமிழக முழுவதும் ஹெல்த் வாக்கிங் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் மாசு சுப்பிரமணியம் மருத்துவ மாநாட்டில் தெரிவித்துள்ளார். கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களின் மருத்துவ மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் who இருதய ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டு கருத்தரங்கு துவங்கி வைத்தனர்.
பின்னர் இந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் மா
சுப்பிரமணியம்:-
இந்த மாநாட்டுக்கு வருகை புரிந்தது மகிழ்ச்சி கோவை மாவட்டத்தில் வருகின்ற பட்ஜெட்டின் போது மருத்துவத் துறை சார்பாக செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து நாளை மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளோம்.இந்தியாவை பொருத்தமட்டில் தமிழகத்தில் தான் 15 சதவீத இருதய நிபுணர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் 1960 ஆம் ஆண்டில் தொடக்கத்தில் இருந்து இருதய சிகிச்சை செய்து வந்துள்ளோம் கலைஞரின் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இதுவரை 750 இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.2008க்கு பின்னால் இருதய அறுவை சிகிச்சையில் தமிழிகம் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாற்று அறுவை சிகிச்சை செய்வதிலும் தமிழகம் தான் முன்னோடியாக இருந்து வருகிறது தமிழகத்தில் நோய் தொற்று காலத்துக்கு பிறகு இளம் வயதில் ஹார்ட் அட்டாக் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள் அது வேதனை அளிக்கிறது. மருத்துவர்கள் இது குறித்து ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் தமிழக அரசின் வேண்டுகோள் அதுதான். இந்தியா முழுவதும் தடம் பதிக்கும் திட்டம் என்னிடம் உள்ளது 25 ஆண்டு காலமாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட நான் தொடர்ந்து பல்வேறு மரத்தான் போட்டிகளில் இந்தியா மற்றும் இன்று வெளிநாடுகளிலும் பங்கேற்று உள்ளேன்.
ஜப்பான் சென்றபோது அங்கு ஹெல்த் வாக்கிங் என்ற பெயரில் அனைவரும் நடை பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.அதேபோன்ற நடைப்பயிற்சியை தமிழக முழுவதும் கொண்டுவர முதல்வருடன் ஆலோசனை செய்த பிறகு அதனை தமிழக முழுவதும் அறிமுகப்படுத்த உள்ளோம். இன்றைய இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மராத்தான் நடத்தப்பட வேண்டும் மராத்தான் அறிமுகம் இல்லாத மாநிலங்களிலும் மாரத்தான் போட்டிகளை நடத்தி தடம் பதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
-சீனி போத்தனூர்.