உடுமலையில் ஷேர் ஷிப் மீடியா நடத்திய மொபைல் குறும்பட திருவிழாவில் சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள்!!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் முதல் முறையாக மொபைல் குறும்பட திருவிழா
26.02.2023 ஞாயிறு மாலை 6 ரோட்டரி கிளப் அரங்கில் நடைப்பெற்றது .
கதை,திரைக்கதை, நடிப்பு மற்றும் சிறந்த படங்களுக்கு 11 விருதுகள் வழங்கப்பட்டன.
சென்னை, பெங்களூர்,ஈரோடு, திருச்சி,சேலம், மதுரை, கோவை, திருப்பூர் உள்பட பல நகரங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மொபைல் போனை பயன்படுத்தி தங்கள் திறமையை வெளிப்படுத்தி சிறந்த கதை அம்சம் சிறந்த நடிப்பு சிறந்த ஒளிப்பதிவு இயக்கம் என தங்கள் திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.
விழாவில் திரைப்பட நடிகர் சாப்ளின் பாலு அவர்கள் கலந்து கொண்டு விருது பெற்ற படக்குழுவினருக்கு வாழ்த்து கூறி சிறப்புரையாற்றினார்.
திரைப்பட கலைஞர் வெண்ணிலா கே.ரவிக்குமார் அவர்கள் விருது பெற்ற படக்குழுவினருக்கு அனைவருக்கும் விரைவில் திரைப்படம் சார்ந்த சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு அழைப்பு விடுத்து வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் கலை நிகழ்ச்சிகளாக பரதம்,பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன
உடுமலைப்பேட்டை தொழிலதிபர் கிருஷ்ணா டிரேடர்ஸ் குமரவேல் வாழ்த்தி உரையாற்றினார்.
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.