ஏழை எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் அதிக சேவைகளை வழங்ககூடிய வகையிலும் பல்வேறு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் நோக்கத்திலும் சூலூரில் புதிய எல்.ஜி
மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை துவங்கப்பட்டுள்ளது.
மகப்பேறு, மகளிர் ஏழை எளியோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் அளிக்ககூடிய வகையிலான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கோவை சூலூரில் துவங்கப்பட்டுள்ளது. இம் மருத்துவமனையை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் நா பழனிச்சாமி திறந்து வைத்தார். மருத்துவர்கள் லதா மற்றும் கோபிநாத் முன்னிலை வகித்தனர். இம்மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் சூலூர் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களது நோய்க்கான தீர்வை ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் இம்மருத்துவமனையானது துவங்கப்பட்டுள்ளது. 15 படுக்கையறை வசதி கொண்ட இம்மருந்துவமனையில் 24 மணி நேரம் செயல்படும் ஆம்புலன்ஸ் சேவை உள்ளதாகவும் குழந்தையின்மை சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மகப்பேறு மருத்துவர் லதா கோபிநாத் தெரிவித்தார். நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதய்யன் திமுக மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் கிருபா கோகுல சங்கர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-சீனி போத்தனூர்.