விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் ஒட்டப்பிடாரம் அருகே வைத்து நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமையில் ஓட்டப்பிடாரம்- புதியம்புத்தூர் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் கோவில்பட்டி கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெற்றது . கூட்டத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து புகார் மனுவாக வழங்கினார்.
விளாத்திகுளம் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் 4 விவசாயிகளுக்கு தீர்வு காணப்பட்டது. ஓட்டப்பிடாரம் பகுதியில் இந்த ஆண்டு மழையின் அளவு குறைவு ஆகவே ஒட்டப்பிடாரம் வட்டாரத்தை வறட்சி பகுதியாக அறிவிக்க விவசாயிகள் கோரிக்கை. இன்று 40க்கு மேற்பட்ட மனுக்களை விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் மனு அளித்தனர்.
இந்த கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் நிஷாந்தினி தனி வட்டாட்சியர் செல்வகுமார், மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்க ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.