ஒட்டப்பிடாரம் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!!
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது அனைத்து உழவர் பெருமக்களுக்கு மானிய விலையில் வேளான் கருவிகள் வழங்கப்படுகிறது.
ஒட்டப்பிடாரம் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறை 2022-23 ஆம் ஆண்டு மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராம ஊராட்சிகளில் 80 சதவிகிதம் , இதர ஊராட்சிகளில் 20 சதவீதம், வேளாண் கருவிகள் 50 சதவீதம் மானியத்தில் உழவர் பெருமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விவசாய பண்ணைக் கருவிகள் கிட் ஒன்றிக்கு 1 கடப்பாறை, 1 இரும்புச்சட்டி, 1 களைகொத்தி , 1 மண்வெட்டி, 2 கதிர் அரிவாள், மொத்தம் 6 கருவிகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது. ஆகவே ஒட்டப்பிடாரம் வட்டாரத்தில் உள்ள சிறு/குறு விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் விவசாய பண்ணைக்கருவிகள் பெற்று பயன்பெற கேட்டு கொள்ளப்படுகிறது.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
புகைப்படம், ஆதார் நகல், வங்கி புத்தகம் நகல், பட்டா நகல்.
என்று வேளாண்மை உதவி இயக்குநர் ஓட்டப்பிடாரம் பீ.அலாய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர் ——- -முனியசாமி.