கிரிப்டோ கரன்சி முதலீடுகள் பற்றி ஓர் விழிப்புணர்வு!!
மிக விரைவாகவும் வேகமாகவும் வளர்ந்து வரும் துறை தான் இந்த கிரிப்டோ கரன்சி மெய்நிகர் பணம் என்னும் துறை.இந்த துறையானது 2008 ஆம் ஆண்டிலிருந்து உலகை ஆண்டு கொண்டு இருக்கிறது. 2020ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல கல்லூரிகளில் கிரிப்டோ கரன்சி சார்ந்த படிப்புகள் பயிற்றுவிக்கப் படுகின்றன.
இந்தத் துறையில் மிகப்பெரிய நிறுவனங்கள் நுழைந்து பெரிய அளவில் வளர்ச்சியை பெற்றுள்ளன.இந்தத் துறையின் மூலம் வேலைவாய்ப்புகள் புதிய உச்சத்தை தொட போகின்றது.
இந்த கிரிப்டோ கரன்சி துறை என்பது பணத்தில் என்னென்ன குறைபாடுகள் உள்ளதோ அதை நிவர்த்தி செய்வதற்கான மாற்று வழியாக உள்ளது.
2008 ஆம் ஆண்டு முதன் முதலில் வந்த கிரிப்டோ கரன்சி பிட்காயின் என்பதன் மதிப்பு இரண்டு ரூபாய் நாற்பது காசுகள் (₹02.40)என்று இருந்தது இன்று அதனுடைய மதிப்பு என்பது சுமார் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் சென்று விட்டது.அப்படியானால் ஆரம்பகட்டத்தில் கிரிப்டோ கன்சில் முதலீடு செய்தவர்களின் வளர்ச்சியை நீங்கள் நினைத்துப் பாருங்கள் அவர்களின் வளர்ச்சி இன்று பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் இதில் இருக்கிற பிளாக் செயின் என்கிற டெக்னாலஜி என்பதே ஆகும்.இந்த டெக்னாலஜியை இன்றுவரை யாரும் ஹேக் (Hack) செய்ய முடியவில்லை அந்த அளவிற்கு பாதுகாப்பானதாகும். அதனால் தான் பிளாக் செயின் டெக்னாலஜி மூலமாக வந்த அனைத்துமே புதிய உச்சத்தை தொட்டு இருக்கின்றன.
நமது வங்கிகளின் நடைமுறைப்படி பணத்தை ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றால் நமது வங்கி கிளையில் இருந்து தலைமை வங்கிக்கு சென்று அங்கிருந்து ரிசர்வ் வங்கிக்கு சென்று அங்கிருந்து நாம் அனுப்பும் நாட்டில் உள்ள சென்ட்ரல் வங்கிக்கு சென்று அங்கிருந்து நாம் அனுப்ப வேண்டியவரின் வங்கிக் கிளைக்கு செல்லும் இதற்கு காலவிரையமும் பண விரயமும் ஆகும் ஆனால் இதுவே கிரிப்டோ கரன்சியாக இருந்தால் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு குறைவான செலவில் அனுப்ப முடியும் இதனால் விரையமும் பண விரயமும் தவிர்க்கப்படுகிறது.
அண்ணா யுனிவர்சிட்டி, பெங்களூருவில் உள்ள ஜெயின் யுனிவர்சிட்டி, நமது கோவையில் உள்ள ரத்தினம் கல்லூரி ஆகியவற்றில் பிளாக் செயின் கிரிப்டோ கரன்சி என்கிற பாடத்திட்டத்தினை இன்றைய இளைஞர்கள் ஆர்வமுடன் படித்துக்கொண்டு உள்ளார்கள்.
நமது நிதி அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்கள் கடந்த மார்ச் 2022-ல் ஒரு தெளிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கிரிப்டோ கரன்சியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் அதனை விற்பனை செய்யும் போது கிடைக்கக்கூடிய லாபத் தொகைக்கு மட்டும் முப்பது சதவீதம் (30%)வரி கட்டுங்கள் என்று கூறியதன் மூலம் இது இந்தியாவில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட துறை என்பதை அனைவரும் அறிந்து கொள்ளலாம்.
சாதாரண நிலையில் உள்ள மக்களும் இந்த துறையில் கால் பதித்து வெற்றி அடைய முடியும் இந்தியாவில் பத்து சதவீதத்திற்கு(10%) மேற்பட்ட மக்கள் இந்த துறையில் முதலீடு செய்துள்ளார்கள் அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினர் இந்தத் துறையில் அதிகமாக முதலீடு செய்துள்ளார்கள். இதனால் மிகப்பெரிய வளர்ச்சியையும் வாய்ப்பையும் இந்த துறை நமக்கு கொடுக்கப் போகிறது.
சுமார் 250 நாடுகளுக்கு மேல் இந்த கிரிப்டோ கரன்சியை அங்கீகரித்து விட்டார்கள்.இன்னும் பல நாடுகளில் மாற்றுப் பணமாக (Alternative Currency) அதாவது பொருளாதார வீக்கத்தின் காரணமாக பணத்தினுடைய மதிப்பு குறையும்பொழுது அதற்கு மாற்றாக கிரிப்டோ கரன்சியை பணமாகவே அறிவித்துவிட்டார்கள் அப்படி முதன்முதலாக உலகில் உள்ள மிகப்பெரும் நிறுவனங்கள் அனைத்தும் முதலில் எல்லாம் ஷேர் மார்க்கெட்டில் தான் தங்களுடைய முதலீடுகளை முதலீடு செய்வார்கள். தற்போது அனைவருடைய பார்வையும் இந்த கிரிப்டோ கரன்சியின் மீது திரும்பி இருக்கிறது.
பெரிய அளவில் முதலீடு செய்பவர்களும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் ஆனால் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் தற்போது சிறிய அளவில் முதலீடு செய்பவர்களின் சதவீதம் நாளுக்கு நாள் மிகப்பெரிய அளவில் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.
ரொனால்டோ என்கிற உலகப் புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர் இந்த கிரிப்டோ கரன்சியின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார் என்பது அனைவரும் பெருமைப்பட கூடிய விசயமாகும். இந்தியாவிலும் மிகப்பெரிய விளையாட்டு வீரர்கள் மற்றும் நடிகர்கள் இந்த துறையின் பிராண்ட் அம்பாசிடர்களாக உள்ளார்கள் என்றால் அவர்கள் அனைவரும் இந்த துறையில் உள்ள வளர்ச்சியை பார்த்துவிட்டு தான் இந்த துறையில் கால் பதித்துள்ளார்கள் விளம்பரங்களில் நடிக்கவும் ஒத்துக் கொண்டுள்ளார்கள்.
எனவே கிரிப்டோ கரன்சி எனும் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமான இந்த துறையை அனைவரும் தேர்ந்தெடுத்து இதில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய வேண்டும்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர் ஈஷா மற்றும்
-சி.ராஜேந்திரன்.