“குறிக்கோளை நோக்கி மாணவிகள் படிக்க வேண்டும்” -பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா,அரசு மகளிர் மேல்நிலை பள்ளி ஆண்டு விழாவில் பேச்சு..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜி ரோட்டில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஐம்பதாவது பொன்விழா ஆண்டு விழா கொண்டாடப்பட்டது பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ச.தர்மராஜ் தலைமை தாங்கினார்.
தலைமையாசிரியர் அ.கோமதி வரவேற்று பேசி ஆண்டறிக்கை வெளியிட்டார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ஜெயிலாப்தீன் குமரன் நகர் காளிமுத்து கவிஞர்.முருகானந்தம் பள்ளி வளர்ச்சி குழு தலைவர் வெள்ளை நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா ஐ.ஏ.எஸ் கலந்துகொண்டு 50வது ஆண்டு விழா கல்வெட்டை திறந்து வைத்தும்,பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தும் மாணவிகளிடையே பேசினார்.
அவர் பேசும் போது “நான் அரசுப் பதவிக்கு வர வேண்டும் என்கிற லட்சியமே எனது தாய் தந்தையரை பார்த்துதான் உருவானது, அவர்கள் இருவருமே அரசு பணிகளில் பணியாற்றியதால் எனக்கும் அவர்களைப் போலவே வரவேண்டும் என்கிற ஒரு ஆர்வத்தால் லட்சியத்தால் நான் என் கல்வியை தொடர்ந்து இப்போது சார் ஆட்சியராக பயணித்து வருகிறேன்.
செய்தித்தாள்களை வாசித்தல் பொது அறிவு விஷயங்களை நிறைய தெரிந்து கொண்டு அரசு தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும்.
இந்த போட்டித் தேர்வுகளில் அதிக உழைப்பையும் அதிக முயற்சியும் எடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
எனவே பள்ளிகளுக்கு வருகிறோம் படிக்கிறோம் என கடந்து போய் விடக்கூடாது இப்பொழுதிலிருந்தே மாணவிகள் லட்சியத்தை வரையறுத்துக் கொண்டு அந்த லட்சியத்தை நோக்கி நாம் கல்வி பயில வேண்டும் அப்பொழுதுதான் மிகப்பெரிய வெற்றியையும் வளர்ச்சியையும் நாம் பெற்று சாதிக்க முடியும் .அதேபோல அரசு பள்ளி மாணவ மாணவிகள் இப்போது மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள் இங்கே நடனமாடிய மாணவிகள் தங்களிடம் இருக்கும் உடைகள் ஒப்பனைகள் உள்ளிட்ட அனைத்தையும் வைத்து அவர்கள் மிகப்பெரிய ஒரு நடனத்தை வழங்கி இருக்கிறார்கள் என்பது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது .ஆகவே வெற்றி என்பதற்கு குறிக்கோள் முக்கியம் அந்த குறிக்கோளை நோக்கி கல்வியை உணர்ந்து படிக்கும் போது வெற்றி நிச்சயம் என மாணவிகளிடையே பேசினார்.
நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் பேச்சுப்போட்டி விளையாட்டு போட்டி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு சான்றிதழ் வழங்கி மாணவிகளிடையே உரையாற்றினார். இதில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் அனந்தநாயகி பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் தனலட்சுமி மாவட்ட கல்வி அலுவலர் கா.க .முருகேசன் .யாவரும் கேளிர் அறக்கட்டளை நிறுவனர் மணிரத்தினம் நகரமன்ற உறுப்பினர்கள் கந்த மனோகரி .கவிதா . பள்ளி மேலாண்மை குழு ஷர்மிளா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் கண்களை கவரும் விதமாக பல்வேறு நடனங்கள் யோகா நிகழ்ச்சிகள் சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை செய்து அசத்தினர் இதில் பள்ளி மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் திரளாக கலந்து கொண்டு வெகுவாக ரசித்து தங்களது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். முடிவில் பள்ளி ஆசிரியை ஸ்வர்ணலட்சுமி நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்
பொள்ளாச்சி.