குற்றவாளிகள் இரண்டு பேரை சுட்டுப்பிடித்த காவல்துறையினர்!!
கோவையை அடுத்த கோவில்பாளையத்தை சேர்ந்தவர் 22 வயதான கோகுல் என்ற சொண்டி கோகுல். இவர் இந்த பகுதியின் ரவுடி என்று கூறப்படுகிறது. கடந்த 2021 – ம் ஆண்டு நடந்த குரங்கு ஸ்ரீராம் கொலை வழக்கில் தொடர்பு இருந்த கோகுல் உள்பட 5 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோகுல் ஜாமீனில் வெளிய வந்தார். இவ்வழக்கு கோவை 3 – வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோகுல் தனது நண்பரான மனோஜ் என்பவருடன் நீதிமன்றத்திற்கு வந்தார். பின்னர் அவர் தனது வழக்கறிஞருடன் உள்ளே சென்று கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்தார். அப்போது மர்ம கும்பல் கோகுல் மற்றும் மனோஜ் ஆகியோரை அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நேற்று மாலை மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் ஜோஷ்வா, கவுதம் ஆகிய 2 பேர் செல்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கொலை வழக்கில் தொடர்புடைய கவுதம், ஜோஷ்வா ஆகியோர் போலீசார் வருவதை அறிந்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கவுதம், ஜோஷ்வா ஆகியோர் கால்களில் துப்பாக்கியால் காவல்துறையினர் சுட்டு பிடித்துள்ளதாக ஆணையர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.