கேலோ இந்தியா தேசிய அளவிலான பெண்களுக்கான வூசு லீக் போட்டியில் இந்திய விளையாட்டு ஆணைய அணி 37 பதக்கங்களை வென்றது!
கோவையில் நடைபெற்ற கேலோ இந்தியா தேசிய அளவிலான பெண்களுக்கான வூசு லீக் போட்டியில் இந்திய விளையாட்டு ஆணைய அணி 37 பதக்கங்களை வென்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
கேலோ இந்தியா யூத் விளையாட்டு போட்டிகளின் ஒரு பகுதியாக தேசிய அளவிலான பெண்களுக்கான ஜூனியர் வூசு லீக் போட்டிகள் கோவையில் முதன் முறையாக நடைபெற்றது.
இந்திய மற்றும் தமிழ்நாடு வூசு சங்கம் ,மத்திய அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியோர் இணைந்து நடத்திய இதில் உத்தர பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், ராஜஸ்தான், டெல்லி என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சான்சூ, டாவுலு என இரு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் மாணவிகள் அசத்தலாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.இதில் தவ்லு பிரிவில் முதலிடத்தை இந்திய விளையாட்டு ஆணையம்,இரண்டாவதாக மத்திய பிரதேசம்,மூன்றாவது இடத்தை மணிப்பூர் அணியும் வென்றன.இதே போல சான்சூ பிரிவில் முதலாவதாக ஹரியானா,இரண்டாவது இடத்தை மணிப்பூர்,மூன்றாவது இடத்தை ராஜஸ்தான் அணிகளும் பிடித்தன.இந்நிலையில் போட்டி இறுதிநாளில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்,கோவை மண்டல வருமான வரிதுறை முதன்மை ஆணையர் பூபால் ரெட்டி,மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணை தாளாளார் சங்கர் வானவராயர் ஆகியோர் கலந்து கொண்டு,வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கினர்.இதில், மொத்தமாக பதினோரு இலட்சம் ரொக்க பரிசு மற்றும்,கோப்பை சான்றிதழ் ,பதக்கங்கள் வழங்கப்பட்டது.
-சீனி போத்தனூர்.