கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் – தமிழகத்திலிருந்து தொடர்ச்சியாக ரேஷன் அரிசிகள் கடத்தப்பட்டு கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வருவது தொடர் கதையாக உள்ளது அதிகமாக ரேஷன் அரிசிகள் https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ கேரளாவிற்கு கடத்தப்படுவதாக வந்த தகவலின் படி தேனி உத்தமபாளையம் காவலர்கள் தங்களுடைய விசாரணை தொடங்கி உள்ளனர். கடந்த தினங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகமும் காவலர்களும் இணைந்து நடத்திய சோதனையில் 17 டன் அரிசியும் அதை ஏற்றி சென்ற லாரியும் பிடிக்கப்பட்டது.
இதில் வாகன ஓட்டுனர் பாலக்காடு சேர்ந்த ஜோனி மற்றும் மதுரையில் உள்ள அரிசி மில் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். பிடிபட்ட அரிசி மூட்டைகளை உத்தமபாளையம் நுகர் பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது. கம்பம் மெட்டு குமுளி வழியாக இந்த அரிசியை கேரளாவிற்கு கடத்த இவர்கள் ம முயற்சி செய்ததாக தெரிய வந்துள்ளது.
அதிகமான தமிழ்நாடு ரேஷன் அரிசி இடுக்கி போடி மெட்டு, கம்பம் குமுளி மற்றும் எர்ணாகுளம் பாலக்காடு வழியாக கடத்திச் செல்லப்படுவதாக தெரிய வந்துள்ளது.
இதில் ஒரு கிலோ அரிசிக்கு 30 ரூபாய் லாபம் கிடைப்பதாகவும் கூறுகின்றனர் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு செல்லப்படும் அரிசியை ரசாயன மூலம் சிவப்பு அரிசியாக மாற்றி வியாபாரம் செய்வதாகும்.இந்த வியாபார திருட்டில் பல பெரிய அரசியல்வாதிகளும் முதலாளிகளும் அரசுத்துறை சார்ந்தவர்களும் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன் மூணார்.