கே எஸ் டாக்கீஸ் திரு கார்த்திக் மற்றும் ஸ்ரீ கோகுல் இவன்ஸ் இன் பிரம்மாண்ட படைப்பாக திருப்பூரில் முதல் முறையாக பிரம்மாண்டமான இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 23 தேதி அன்று நடைபெற உள்ளது. இசை நிகழ்ச்சிக்கான போஸ்டர் வெளியீட்டு விழா திருப்பூர் பப்பிஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவை சிறப்பிப்பதற்காக முதல் கட்ட போஸ்டரை திறந்து வைப்பதற்காக ஏவிபி ஸ்கூல் நிறுவனர் திரு. கார்த்திக், சுப்ரீம் மொபைல்ஸ் நிர்வாக இயக்குனர் திரு ராதாகிருஷ்ணன் வந்து விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் கே. எஸ் டாக்கீஸ் திரு கார்த்திக் அவர்கள் கூறியதாவது ;
வரும் பிப்ரவரி 23ஆம் தேதி முதல் டிக்கெட் ஆன்லைனில் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்ட ஸ்டோர்களிலும் நேரடியாக சென்று டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சுமார் 30,000 பார்வையாளர்கள் வர வாய்ப்புள்ளது என்றும் கூறினார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-பாஷா.