திருப்பூரில் ரூ. 50 லட்சம் துணி திருட்டு கள்ளக்குறிச்சி நபர் உட்பட இருவர் கைது!!
திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள துணிகளை திருடி விற்ற வழக்கில், குடோன் மேற்பார்வையாளர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், மங்கலம் ரோட்டில் ஏற்றுமதி பனியன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு, 7,000 கிலோவுக்கு மேல் துணி ரோல்கள் மாயமானது தெரிந்தது. இதனால், திருப்பூர் சென்ட்ரல் போலீசில், பனியன் நிறுவன மேலாளர் ஆனந்த் புகார் கொடுத்தார்.புகாரின்படி, கே.வி.ஆர்.நகர் உதவி கமிஷனர் கார்த்திகேயன், சென்ட்ரல் இன்ஸ்பெக்டர் ஜமுனா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் விசாரித்தனர். அவர்கள், நிறுவன கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டனர்.குடோனில் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த நாகேந்திரன், 51, அதிகாலை நேரத்தில், சாயமிட அனுப்புவதாக,செக்யூரிட்டி’யை ஏமாற்றி, துணி ரோல்களை வாகனத்தை வரவழைத்து கடத்திச் சென்றது தெரிந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பனியன் நிறுவனத்தில் இருந்து திருடப்பட்ட துணிகளை, திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் ‘செகண்ட்ஸ்’ வியாபாரம் செய்து வரும் ஆறுமுகம், 64, என்பவருக்கு விற்பனை செய்தது தெரிந்தது.அவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, திருக்கோவிலுாரில் பதுங்கியிருந்த நாகேந்திரனை பிடித்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். நாகேந்திரன் வங்கி கணக்கில் இருந்த, 22 லட்சம் ரூபாய், 2,640 கிலோ துணி, திருட்டுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் கூறுகையில், ‘பனியன் ரோல் துணிகளை திருடி, ஆறுமுகம் உதவியுடன் வெளியே, 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தார். அந்த பணத்தில் சொந்த ஊரில் உள்ள வீட்டை புதுப்பித்து ஆடம்பர செலவுகளை செய்தது தெரிந்தது. ‘வங்கியில் இருந்த மீதமுள்ள 22 லட்சம் ரூபாயை வங்கி கணக்கை முடக்கி பறிமுதல் செய்துள்ளோம்’ என்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-பாஷா.